🛕 ஓம் சரவணபவ · Verified Thiruppugazh text
திருப்புகழ் 6 திருவருணை

முத்தைத்தரு

Muththaiththaru

Extended title: முத்தைத்தரு பத்தித் திருநகை · Muththaiththaru Pathi Thirunagai

Author: அருணகிரிநாதர் / Arunagirinathar

Venue: திருவருணை · Thiruvarunai literary venue

Chanda / rhythmic opening: தத்தத்தன தத்தத் தனதன

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

Uses the Tamil voice installed on this device. No recording is downloaded.

Editorial reading guide

A prayer to Murugan as the supreme guru and protector, joining the teaching of sacred wisdom with vivid images of divine victory.

This is an editorial orientation, not a line-by-line translation.

Source citation

697840-அருணகிரிநாதர்-அருளிய-திருப்புகழ்-(1)-(1).pdf

Internal heading: பாடல் 6 (நூல்)

The Tamil song text was manually checked before publication. OCR-only material was excluded.

Open source record

Numbering and traditional-role note

This page keeps source-specific number 6. Sivaya also indexes the song as sequence 6. Tamil Virtual Academy describes Kaithalam Niraikani as the first special introductory Vinayagar verse and says Muththaiththaru is placed at the beginning of the main book.

Some devotional accounts describe Muththaiththaru as the first Murugan-given or first-composed verse. That is presented as traditional hagiography, not as a reason to renumber this source record.

Sivaya sequence 6 Tamil Virtual Academy structure note

Rights and research boundary

The underlying literary text, the repository transcription, easy-reading Tamil, transliteration, translation, commentary, musical arrangement, notation, performance and sound recording are treated as separate rights layers.

No third-party recording, modern translation, notation or commentary is published from the submitted research. India-specific statutory term research does not create a universal international rights conclusion.

Open governed reconciliation record

▶ Open in read-aloud player